இரட்டைத் தலையுடன் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி
இரட்டைத் தலையுடன் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி
பவட மொரோக்கோவிலுள்ள கிராமமொன்றில் இரு தலைகளைக் கொண்ட விசித்திர கன்றுக்குட்டியொன்று பிறந்துள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி பிறந்த இந்த கன்றுக்குட்டி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்தக் கன்றுக்குட்டிக்கு அரேபிய மொழியில் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு என பொருள்படும் வகையில் சனா செய்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெஸ் நகரிலிருந்து 20 மைல் தொலைவிலுள்ள செப்ரோயு நகரில் பிறந்த இந்தக் கன்றுக்குட்டியை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் அந்தக் கிராமத்தில் கூடியுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமெரிக்க வெர்மொன்டிலிலுள்ள விட்டிங் நகரில் இரட்டைத் தலையுடைய கன்றுக்குட்டி பிறந்தமை குறிப்பிடத்தக்கது.



