கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுல்லியா மற்றும் புத்தூர் பெருந்தோட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான ஜாதி சான்றிதழ்களை வழங்க அந்த மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் சித்தரமைய்யா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்து - இலங்கை உடன்படிக்கையின் கீழ், 1964ம் மற்றும் 1974ம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்து சென்ற சுமார் 1000 குடும்பங்கள் இன்றும் இந்திய குடியுரிமை வழங்கப்படாத நிலையில் அங்கு வசித்து வருகின்றனர்.
அவர்கள் அங்குள்ள இறப்பர் தோட்டங்களில் பணியாற்றுகின்றனர்.
அவர்களுக்கான ஜாதி சான்றிதழ்கள் கடந்த 2002ம் ஆண்டு வரையில் வழங்கப்பட்டு வந்த போதும், அகதிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டது.
எனினும் இந்தியாவில் அவர்களுக்கான அடிப்படை சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கு, ஜாதி சான்றிதழ்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறன.
இந்த நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து 15 நாட்களுக்குள் தமக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, மாநில முதலமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் அவர்களுக்கான ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது

