ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

குருநகர் மாடி வீட்டுத் திட்ட புனரமைப்புப் பணிகள் ஆராய்வு!



யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடிக் கட்டிடத் தொகுதியின் மீள்புனரமைப்புப் பணிகளை ஆராயும் முகமாக நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளை உடனடியாக தொடங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

குருநகர் பகுதிக்கு இன்றைய தினம் (08) மீண்டும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மேற்படி பணிப்புரையினை விடுத்துள்ளார்.



மீள்புனரமைப்புப் பணிகள் தொடர்பில் குடியிருப்பு மக்களால் தமக்கு பூரண திருப்தியில்லையென சுட்டிக்காட்டியதற்கு அமைவாகää முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை கண்காணிக்கும் வகையில் தேசிய வீடமைப்புää இலங்கை மின்சாரசபை அபிவிருத்தி அதிகார சபைää யாழ்.மாநகர சபைää கட்டிடத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளையும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் இளங்கோ (றீகன்) மற்றும் மாடி வீட்டுத்திட்ட சங்க செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை அமைச்சர் அவர்கள் நேற்று மாலை நியமித்திருந்தார்.



இதன்பிரகாரம் மேற்படி குழு புனரமைப்புப் பணிகளை கண்காணிக்கும் அதேவேளைää பணிகள் தொடர்பில் தமக்கு மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.



இதன்போதுää யாழ்.மாநகர முதல்வர் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.