ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

நடிகர் மன்சூர் அலிகான் தலையில் தீ........(படங்கள்) !!

பரபரப்பு, பப்ளிசிட்டிக்காக பல கோக்கு மாக்கு சமாச்சாரங்களைச் செய்வதில் மன்சூர் அலிகான், இன்னொரு ஹூஸைனி.தன் சொந் தப் படங்களுக்கு மன்சூர் அலிகான் வைக்கும் பெயர்களே ஏடா கூடமாகத் தான் இருக்கும்.ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன், ராவணன், வாழ்க ஜனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு , என்னைப்பார் யோகம் வரும் மற்றும் லொள்ளுதாதா பராக் பராக்... -இவையெல்லாம் மன்சூர் அலிகான் இதற்கு முன் தன் சொந்தப் படங்களுக்கு சூட்டிய தலைப்புகள்.

போனால் போகட்டுமென்று இந்த முறைதான் தனது சொந்தப் படத்துக்கு சிக்க னமாக அதிரடி என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. கலைப்புலி எஸ் தாணு , கலைப்புலி சேகரன் கலந்து கொண்டனர். மன்சூரலிகானின் மகன்களும் சிறப்பு விருந்தினர்களும் சேர்ந்து பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வடிவில் பிரத்யே கமாகச் செய்யப்பட்ட கேக்கினை வெட்டினார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி இசையமைப்பதுடன் இயக்கவும் உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்து விட்டு துவக்கவிழாவை அதிரடியாக நடத்தாமல் இருந்தால் நன்றாக இருக்குமா..? அதனால், அதிரடி படத்துவக்க விழாவில், தனது வயிற்றின் மீது 125 கிலோ எடை உள்ள நபரை நிற்க வைத்து உடற்பயிற்சி மன்சூரலிகான் உடற்பயிற்சி செய்தார். தொடர்ந்து அவரது வயிற்றில் மிகப்பெரிய கருங்கல் வைத்து அதனை ஸ்டண்ட் கலைஞர்கள் சம்மட்டியால் உடைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ஓடுகளின் மீது நெருப்பை பற்ற வைத்து தலையால் உடைக்கையில் எதிர்பாராத விதமாக தலையில் தீ பற்றிக் கொண்டது. உடனே உதவியாளர் ஓடிவந்து கோணிப்பையால் தீயை அணைத்தார். இதனால் சற்று பர பரப்பு ஏற்பட்டது.









Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.