ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

பாடசாலை மாணவர்களை ஆரோக்கியமானவர்களாக வளர்ப்பதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நோக்கம்

இணக்க அரசியல் ஊடாகவே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியலூpமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே வென்றெடுக்க முடியுமென உடற்கல்வி டிப்ளோமா பட்டதாரி ஆசிரியர் தர்மகுமார் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)



யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா பட்டதாரிகள் அமைச்சர் அவர்களுடன் இன்றைய தினம் (05) சந்தித்து கலந்துரையாடினர்.



இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்ää



பாடசாலை மாணவர்களை சிறந்த ஆரோக்கியமுள்ள சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே அமைச்சர் அவர்களது பிரதான நோக்கமாகவுள்ளது.



தேர்தல் காலங்களில் ஏனைய அரசியல்வாதிகள் சாத்தியப்படாத வாக்குறுதிகளை மக்களிடம் வழங்கி வாக்குகளைப் பெற்றுää இறுதியில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.



ஆனால் அமைச்சர் அவர்கள் சாத்தியமாகும் வாக்குறுதிகளை மக்களிடம் வழங்கி; மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு அவற்றை நிறைவேற்றியும் வருகின்றார்.



இந்நிலையில் இணக்க அரசியல் ஊடாகவே தமிழ் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி உள்ளிட்ட அரசியலுரிமையையும்ää ஏனைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியுமென்றும் அது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே சாத்தியமாகும். அந்தவகையில் தமிழ் மக்களின் முயற்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் அமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக அயராது அளப்பரிய சேவையாற்றி வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.


இதன்போது அமைச்சர் அவர்கள் கருத்துரையாற்றும் போதுää யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது வடக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் அனைவரையும் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் பங்கெடுக்கச் செய்து அவர்கள் ஆரோக்கியமுள்ள சமூகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்மெனக் கேட்டுக் கொண்டார்.



இதன்போதுää வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசில் வழங்கி கௌரவித்தனர்.



இதில் வடக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்குழு தலைவர் இரா. செல்வவடிவேல்ää அமைச்சரின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.





Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.