மீனவர் ஒருவரின் வலையில் பிடிபட்ட 15 அடி நீளமான முதலையினை அதிகாரிகள் மீண்டும் வாவியில் விட்ட சம்பவம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடுவோர்களை அச்சுறுத்தி வரும் இரு முதலைகளில் ஒன்று, மீனவர் ஒருவரின் வலையில் சிக்கியுள்ளது.
இது தொடர்பாக மட்டக்களப்பு சிவில்பாதுகாப்பு குழுவின் தலைவர் ராஜன் என்பவர், மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் முதலையினை பிடித்துள்ளனர்.
ஆனால், பிடித்த முதலையினை கொண்டு செல்வதற்கு வசதிகள் இல்லையெனக் கூறி மீண்டும் வாவிக்குள் விட்டுக் சென்றதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முதலைகளால் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் தங்களுக்கு அதிகாரிகளின் அசமந்தப்போக்கு பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


