ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

ஸ்டீபன் ரெப்­புக்கு மசாலா தோசை விருந்தளித்த வடக்கு முதலமைச்சர். சந்திப்பு குறித்து கருத்துக் கூற மறுப்பு

.யாழுக்கு விஜயம் செய்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன்
ரெப் நேற்று மாங்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் . தூதுவர் ரெப்பின் விருப்பத்திற்கமைய அவருக்கு மசாலா தோசையினை வழங்குவதற்காக குறித்த விடுதியினை வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவுசெய்துள்ளார் என விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர் .

இரவு 8 மணியளவில் ஆரம்பமாகிய இந்த இரவு விருந்துபசார நிகழ்வு சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றது . இந்த விருந்துபசாரத்தின் வடக்கின் தற்போதைய நிலை தொடர்பாக இருதரப்பினரும் சுவாரசியமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர் .

இச்சந்திப்புக்குப் பின்னர் முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் இச்சந்திப்புத் தொடர்பாகக் கருத்துக் கேட்டபொழுது , இச்சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் ஸ் ரீபன் ராப் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்காமல் சென்றுள்ளமையினால் தன்னால் இங்கு என்ன பேசப்பட்டது என்ற விடயத்தை தெரிவிக்க முடியாது என முதலமைச்சர் ஆணித்தரமாக ஊடகங்களுக்கு தெரிவித்து கருத்துக் கூற மறுத்துவிட்டார் .

இதேவேளை , இச்சந்திப்பில் வடபகுதி மக்கள் தற்பொழுது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இம்மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இருதரப்பினரும் பரஸ்பரம் கலந்துரையாடியதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளன .

முதலமைச்சர் மற்றும் ஸ் ரீபன் ராப் ஆகியோரின் சந்திப்புத் தொடர்பாக முக்கியமான விடயங்கள் வெளிவரும் என நீண்டநேரமாக மாங்கோ விருந்தினர் விடுதியில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் முதலமைச்சரின் இப்பதிலுக்குப் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை முன்னதாக நேற்றுப் பிற்பகல் கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த ஸ் ரீபன் ரெப் , அவர்களிடம் வடக்கின் நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்துள்ளார் . இச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவில் வைத்தியர்கள் , மதகுருமார் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்துகொண்டனர் . பாது காப்புக் காரணங்களுக்காக இக்கு ழுவினர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.