கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட நாடக பிரதியாக்கப் போட்டியில் யாழ்மாவட்டத்தைச்சேர்ந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூயின் நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.குமரன் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகிய இருவரும் தேசிய ரீதியிலான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட திறந்த நாடகப் பிரதியாக்கப் போட்டியில் கலந்து கொண்ட நாடகப்பிரதிகளில் இருந்து வெற்றிபெற்ற 10 மூத்த நாடக படைப்பாளிகளுடைய நாடகப்பிரதிகளும் ஆறு இளம் படைப்பாளிகளின் நாடகப்பிரதிகளும் தெரிவு செய்யப்பட்டு விம்பம் என்னும் பதினாறு நாடகப்பிரதிகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் விருது வழங்கல் நிகழ்வும் கொழும்பு றோயல் கல்லூரி அதிபர் உபாலி குணசேகர தலைமையில் நடைபெற்ற போது இவ் தேசிய ரீதியிலான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஓய்வு நிலை பிரதி பரீட்சை ஆணையாளர் ஜீ.போல் அன்ரனி அவர்களும் துறைசார் விருந்தினராக நாடகக் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நூல் ஆய்வுரையை நாடகக்கலைஞர் கலைச்செல்வன் நிகழ்த்தினார்
தேசிய ரீதியிலான சிறப்பு விருதினைப் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இத் தேசிய ரீதியிலான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.இவ்விருதினை பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை சிறப்பு பட்டதாரி மாணவர்கள் என்பதுடன் முதுகலைமாணிப்பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவர்கள். தற்போது நாடகத்துறை ஆசிரியர்களாவும் அளவெட்டி மாகாஜன சபை கலைஞர் வட்டத்தின் நாடகத்துறைக்காண இணைப்பாளராகவும் புத்தாக்க அரங்க இயக்கத்தின் இயக்குநர்களாகவும் நாடகத்துறைக்கான பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

