ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்டன.



இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில்
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்டதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

' டுவிட்டர் ' சமூக வலைத்தளத்தில் அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது .

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே . ராப்பின் மற்றும் அமெரிக்க தூதுவர் மிசெல் சிசேன் ஆகியோர் வட பகுதிக்கு விஜயம் செய்தனர் .

வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெற்ற இடத்திற்கு அவர்கள் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளனர் .

அவர்கள் பார்வையிட்ட புனித அந்தோனி மைதானத்திற்கு அருகில் இருந்து ' இந்த இடத்தில்தான் 2009 இல் இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உயிரிழந்தனர் ' என்று அவர்களின் புகைப்படத்துடன் அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ' டுவிட்டர் ' பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.