ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

டொரண்டோவில் பாலியல் பலாத்கார வழக்கில் தமிழர் !

டொரண்டொவில் டாக்சி டிரைவராக வேலை செய்யும் தமிழர் ஒருவர் அதிகாலை வேளையில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்நாதம் அறிகிறது.

டொரண்டோவில் கடந்த 3ம் திகதி அதிகாலை நேரத்தில் Bloor Street West and Markham Street என்ற பகுதியில் ஒரு பெண் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஜெயகுமார் என்ற டாக்சி டிரைவர் தன்னுடைய டாக்சியில் அவ்வழியே வந்துள்ளார். அவருடைய காரை நிறுத்திய அந்த இளம்பெண், தன்னை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கோரியுள்ளார்.

வாடகை எவ்வளவு என்று பேசியபின் டாக்சி டிரைவர் அவரது வீட்டில் இறக்கிவிட்டிருக்கின்றார். பின்னர் அந்த பெண் அவரது வீட்டிற்குள் சென்றபோது பின்னால் தொடர்ந்து வந்த ஜெயகுமார் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் கனடிய தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த இளம்பெண் போலீஸில் புகார் செய்ததால் போலீஸார் டிரைவர் ஜெயகுமாரைகைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி Old City Hall என்ற நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.