ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (05) வீரகேசரி வாரஇதழுக்கு வழங்கிய செவ்விகேள்வி :- கரும்புச் செய்கைக்காக 71 ஆயிரத்து 716 ஏக்கர்
காணிகள் வடக்கில் சுவீகரிக்கப்படவுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. இந்த செயற்பாட்டிற்கு நீங்கள் ஆதரவு
தெரிவிக்கின்றீர்கள். இதற்கு உங்கள் நிலைப்பாடென்ன?
பதில் :- இந்த விடயத்தின் பின்னணி தெரியாமலே செய்திகள்
வெளியாகியுள்ளன. கரும்புச் செய்கைக்காக காணிகள் சுவீகரிக்கப்பட
வேண்டுமென்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல. அமைச்சரவையின்
அங்கீகாரம் பெற்ற பின்னர் தான் அது அரசாங்க கொள்கையாக
நோக்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சர்களும் தமது அமைச்சு
தொடர்பான புதிய புதிய வேலைத்திட்டங்கள் முன்வைப்பார்கள்.
ஆனால்ää அமைச்சரவையில் ஏற்றுக் கொண்ட பின்னர் தான் அது
அரசாங்கத்தின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவேää
கரும்புச் செய்கைக்கா காணி சுவீகரிக்கப்பட வேண்டுமென்பது
இதுவரை அரசாங்கத்தின் கொள்கையல்ல.
தமிழ் பேசும் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்ற
வகையிலும் எனக்கு அந்தப் பிரதேசங்களில் கூடிய
அக்கறையிருக்கிறது என்ற வகையிலும்ää சக அமைச்சர் என்ற
வகையிலும்ää நான் எனது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அந்தவகையில்ää நான் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து
வருகின்றேன். அவ்வாறு ஆய்வு செய்யும் போது அந்தப் பிரதேச வாழ்
மக்களுக்கும்ää அந்தப் பிரதேசத்திற்குää அந்தப் பிரதேச மண்ணுக்கு
உகந்ததல்ல என்று தெரியவந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டோம். அத்துடன் அதனை நாங்கள் வலுவாக அமைச்சரவையில்
எதிர்ப்போம். அமைச்சரவையும் அதனை ஏற்றுக் கொள்ளும் இதுதான்
இந்தப் பிரச்சினையின் யதார்த்தம். அதைவிடுத்து இது அரசாங்கத்தின்
செயற்பாடுää அரசாங்கத்தின் கொள்கையென்று பிதற்றிக் கொள்வதில்
அர்த்தமில்லை. குறித்த ஒர் அமைச்சர் தனது அமைச்சு ரீதியில் ஒரு
முடிவை எடுத்துள்ளார். இவ்வாறு பல முடிவுகள் எடுக்கப்படலாம்.
அதற்காக அது அரசாங்க கொள்கையாகக் கருத முடியாது.
அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர் தான் அது
அரசாங்கக் கொள்கையாக கருத முடியும்.
கேள்வி :- 71 ஆயிரத்து 716 ஏக்கர் அரச காணிகள் வடக்கில்
காணப்படுகின்றனவா?
பதில் :- அதிகமான காடுகள் காணப்படுவதால் அதனை பயன்படுத்த
அவர்கள் எண்ணியிருக்கலாம். அது எப்படியோää இந்தப் பிரச்சினை
தொடர்பான எமது கோரிக்கையை அமைச்சரவையில ;
முன்வைத்துள்ளோம். அதற்கான பதில் கிடைத்த பின்னர் தான் இது
தொடர்பில் விரிவாக என்னால் கூற முடியும். ஆனால் இவ்வாறான
பிரச்சினைகள் பலதடவைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டன.
ஆனால் அவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை.
கேள்வி:- இதேபோல்ää முல்லைத்தீவு மாவட்டத்தில் இறப்பர்
செய்கையை மேற்கொள்ளப் போவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு
ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால்ää அது
நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு தான் இந்த விடயமும்
ஏற்படும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில் :- முல்லைத்தீவு பிரதேசம் இறப்பர் செய்கைக்கு உகந்ததா
என்ற பிரச்சினை இருக்கிறது. அதுதொடர்பில் மண்வளம் உள்ளிட்ட
வளங்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். எனவேää இதுவும்
அமைச்சர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே தவிர
அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. அந்தப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர்
என்ற வகையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுவதற்கான உரிமை
எனக்கிருக்கிறது. அந்தவகையில்ää இவ்வாறான திட்டங்கள் குறித்த
பகுதி மக்களுக்கும்ää மண்ணுக்கும் உகந்ததா அல்லது பாதகமானதா
என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சாதகம் என்றால்
அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் முழுமையான ஆதரவை
வழங்குவோம். அது பாதகம் எனில் ஏற்றுக் கொள்ள முடியாது.
அத்துடன்ää சாதகமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டால்
அந்தப் பிரதேச மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
அதுமட்டுமன்றிää இதனால் குறித்த பகுதியின் வளங்கள்
சுரண்டப்படுகின்றதா என்பதையும் அவதானிக்க வேண்டும். அவை
அனைத்தையும் கவனத்தில் கொண்டுதான் நாங்கள் முடிவினை
எடுப்போம்.
கேள்வி:- 6000 ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகளை
இராணுவத்தினர் சுவீகரித்துள்ளனர். அவற்றை மக்களுக்கு வழங்குவது
தொடர்பில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளர்கள்?
பதில் :- அதனை மக்களிடம் மீட்டுக் கொடுப்பதற்கு பொருத்தமான
அரசியல் சூழல் எமக்கு ஏற்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää
தாங்கள் வடமாகாண ஆட்சியை கைப்பற்றினால் காணிப்பிரச்சினை
உள்ளிட்ட வடக்கு மக்களின் பிரச்சினைக்களுக்குத் தீர்வு பெற்றுத்
தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால்ää அவர்கள் இப்போது
அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. நாங்கள்
எமக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாகப்
பலவேலைத்திட்டங்கள் மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று வட
மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள்
ஆணையைப் பெற்றுள்ளது. ஆனால்ää அவர்களது செயற்பாட்டிற்கும்
எங்களது செயற்பாட்டிற்கும் வேறுபாடு இருக்கின்றது.
தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரை பிரச்சினையை தீராப்
பிரச்சினையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.
ஆனால் எம்மை பொறுத்தவரை பிரச்சினைகளுக்கு தீர்வு
காணும்வகையில் அணுகவேண்டுமென்பதே எங்களது நோக்கம்.
கேள்வி:- தமிழ் மக்களின் காணிப் பிரச்சினையிலாவது கூட்டமைப்பும்ää
ஈ.பி.டி.பியும் இணைந்து தீர்வு காண்பதற்கு ஏதாவது நடவடிக்கை
எடுக்க முடியாதா?
பதில் :- அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவில்லை.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பிரச்சினையை தீர்க்கும்
நோக்கமில்லை. இவ்வாறு தீர்க்கும் நோக்கம் இருந்தால் அவர்கள்
முன்வந்திருப்பார்கள். கடந்த காலங்களில் ஆயுதப்
போராட்டமாகயிருந்தாலும் அதற்கு முந்திய ஜனநாயக வழிப்
போராட்டமாக இருந்தாலும்ää அல்லது இன்றைய
நிலைமையாகயிருந்தாலும் இவர்களுக்கு பிரச்சினையை தீர்க்கும்
நோக்கமில்லை. அவ்வாறு எண்ணியிருந்தால் பிரச்சினையை எப்போதே
தீர்த்திருக்கலாம்.
ஆயுதப் பேராட்டத்திற்கு ஒர் தேவையிருந்தது. நானும் அதில்
சம்பந்தப்பட்டிருந்தேன் என்பதற்காக நியாயப்படுத்த வரவில்லை.
ஆனால்ää அந்த ஆயுதப் பேராட்டம் இலங்கை - இந்திய ஒப்பந்த
காலத்தில் தான் தேவைப்பட்டது. இலங்கை - இந்திய
ஒப்பந்தத்திற்குப் பின்னர் அதன் தேவையிருக்க வில்லை. அளவுக்கு
மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல்தான்
இறுதியில் ஏற்பட்டது. நாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களோ
அல்லது பிரச்சினைக்கு வெளியிலிருந்தோ கதைப்பவர்களே அல்ல.
நாங்கள் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள். இரத்தமும்
சதையுமாகயிருந்தவர்கள்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட
மாகாணசபை முறைமைதான் நடைமுறைக்குசாத்தியமானது.
அதிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்ட
போதுää அதுசாத்தியமற்றதுää காலங்கடந்ததுää உழுத்துப் போனது
என்றெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டது. ஆனாலும்ää
இப்பொது அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த
மாகாண சபை எங்களது கைகளுக்கு வந்துவிட்டால் மக்களின்
பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து விடுவோம் என்பதற்காக மாகாண
சபையை இப்பொழுது ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்களிடம்
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் ஆணையைப்
பெற்றுள்ளார்கள். ஆனால்ää மூன்று மாதங்கள் கடந்தும் மக்களுக்கு
வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற அதிகாரத்திற்கேற்ப வேலைகளை
முதலில் செய்து காட்ட வேண்டும். அதன்பின்னர் அதற்கு மேல்
செல்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஆனால் இரண்டும் கெட்டான்
நிலையில் செயற்படுவது சிறந்ததல்ல.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இரட்டைத்
தோணியில் கால் வைத்தது போல் இருதலை கொள்ளி எறும்பாக
செயற்படுகின்றார். முதலில் ஆன்மீகத்தின் ஊடாக அரசியல் பற்றிப்
பேசினார். இப்போது அரசியலின் ஊடாக ஆன்மீகம் பற்றி பேசுகின்றார்.
கேள்வி: வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம்
தடையாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றதே. இது தொடர்பில்
நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: அரசாங்கம் எந்தவொரு தடையையும் மேற்கொள்ளவில்லை.
ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை என்கின்ற நிலைமைதான்
வடமாகாண சபையில் காணப்படுகின்றது. 13ஆவது திருத்தச்
சட்டத்தின் பிரகாரம் ஏனைய மாகாண சபைகள் அனைத்துக்குமுள்ள
அதிகாரங்கள் வடமாகாண சபைக்கும் இருக்கின்றது. ஆனால்ää
அதைவிட அதிகமான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதாயின்
அரசாங்கத்துடன் இணக்கப்பாடுடன் செயற்படவேண்டும். புரிந்துணர்வின்
மூலம் ஓர் இணக்க அரசியலூடாக அதனைச் செய்திருக்கலாம்.
வடமாகாண சபை தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்யமாட்டோம் என்று கூறினார்கள். பின்னர்
ஜனாதிபதி முன்னிலையில் சந்தியப்பிரமாணம் செய்தார்கள். அது
சரியான முடிவு. தொடர்ந்தும் அதே வழி யைப்
பின்பற்றியிருக்கலாம்.ஆனால் மறுபடியும் குழப்பத்தையே
உருவாக்கியுள்ளார்கள். ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி சிறந்த
முறையில் இந்த மாகாண சபையினை முன்னெடுத்திருக்கலாம்.
ஏனைய மாகாண சபைகளைப் பொறுத்தவரை அதிகாரங்கள்
தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை தேவையும் இல்லை.
ஆனால் எமக்கு அதற்கான தேவை இருக்கின்றது.
கேள்வி: வடமாகாண ஆளுநரை நீக்கிவிட்டு சிவில் சமூகத்தைச்
சேர்ந்த புதியவரை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள்
முனi; வக்கபப் ட்டுள்ளதே?
பதில்: அது தேவையற்ற ஒரு விடயம். ஆளுநர் என்பவர் தனித்து
செயற்பட மாட்டார். அவர் அரசாங்கத்தின் கொள்கைகளைப்
பிரதிபலிப்பவராகவே காணப்படுவார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சொல்வதைப்போல் புதியவரை நியமித்தாலும்ää மீண்டும் ஏதாவது
பிரச்சினைக்களைக் குறிப்பிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை ஏதாவது பிரச்சினை இருக்கவேண்டும்
என்றுதான் எதிர்பார்க்கின்றார்கள். சரத் பொன்சேகா இராணுவத்
தளபதியாக இருந்தவர். அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாக்களிக்கும்படி மக்களிடம் கூறியது. அவ்வாறு இருககு; ம் போதுää
வடமாகாண ஆளுநர் ஓர் இராணுவ அதிகாரியாக இருந்தவர் என்று
குறற் ம் சாட்டுவது பொருத்தமற்ற செயலாகும்.
நன்றி வீரகேசரி

