பாதிக்கப்பட்டுள்ள எங்கள் மக்களை இனியும் எவரும் பயன்படுத்திவிட்டுச்செல்ல மக்கள் அனுமதிக்கக் கூடாது உண்மையாக மக்களுக்கு சேவை செய்கின்றவர்கள் யார்? மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கின்றவர்கள் யார்? மக்களின் நலன்களுக்காக தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றவர்கள் யார்? என்பதை மக்கள் அறிந்து அவர்களை தங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்து தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் மாறாக மக்களின் மீது ஏறிநின்று உயரம் பார்த்துவிட்டுச்செல்வதற்கு எவருக்கும் மக்கள் அனுமதிக்கக் கூடாது என கண்டாவளை பிரதேச சமூக ஆர்வலரும் சமூகசேவையாளருமான கந்தர் வித்தியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கண்டாவளை மற்றும் கோரக்கண்கட்டு கிராமங்களில் இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பேர்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் காலங்களில் பலர் வந்து செல்கின்றார்கள் அடுக்கடுக்காக வசனங்களை பேசி மக்களை கவர்ந்து வாக்குகளை பெற்றுவிட்;டுச் செல்கின்றார்களே தவிர மக்களின் மேம்பாட்டிற்காக எதனையும் செய்வதாக இல்லை ஆனால் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களும் அவரது கட்சியினரும் இதற்கு புறம்பாக மக்களின் முன்னேற்றத்திற்கு தங்களால் இயன்ற எல்லா வகையான உதவிகளையும் செய்து வருகின்றார்கள் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கண்டாவளை மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் கட்சி சார்ந்தவர்களுக்கு வாக்களிக்கவில்லை இருப்பினும் அவர் எங்கள் கிராமத்திற்கான அபிவிருத்தி பணிகளுக்கு முக்கியத்துவம்கொடுத்து படிப்படியாக மேற்கொண்டு வருகின்றார்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியிருந்த போது உழவு இயந்திரத்தில் மாவட்ட அரச அதிபர் சகிதம் வருகைதந்து எங்கள் மக்களை பார்வையிட்டு உதவியதோடு எங்கள் கிராமத்திற்கான மின்சார விநியோகத்தினையும் முன்னுரிமைப்படுத்தி மேற்கொண்டு வருகின்றார் எனவே மக்களாகிய நாங்கள் இவ்வாறான பிரதிநிதிகளை தெரிவுசெய்து அதிகாரங்களுக்கு அனுப்புவதன் மூலம் விரைவாக நாம் எமது வாழ்க்கையில் முன்னோக்கி பயணிக்க முடியும் கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை இனியும் விடக்கூடாது எனத்தெரிவித்த அவர் வருகின்ற தேர்தலில் மக்கள் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் அவ்வாறெனின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் வேட்பாளர் கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான தவநாதன் ஓய்வுப்பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக்குழுவின் தலைவருமான பத்மநாதன் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் இராமசந்திரன் பளை சமூக சேவையாளர் தர்மலிங்கம் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தலைவர் இரத்தினமணி சிவில்அமைப்புகளின் பிரதிநிதி மணியம்மாஸ்ரர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

