ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

கொல்லங்கலட்டி நாகதம்பிரான் ஆலயத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.




புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கொல்லங்கலட்டி நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்துள்ளார்.

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவின் கீழான மாவைகலட்டி, கொல்லங்கலட்டி பகுதிக்கு இன்றைய தினம் (15) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டார்.

மாவிட்டபுரம் கந்தன் ஆதீன பிரதமகுரு இரட்ணசபாபதி குருக்கள் சிறப்புப் பூசை வழிபாடுகளை நடாத்தினார்.

தொடர்ந்து நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் அவர்கள் நாட்டி வைத்ததுடன், ஏனையோரும் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குகேந்திரன் (ஜெகன்) ஈ.பி.டி.பியின் வலி.வடக்கு பிரதேச இணைப்பாளர்  ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோர் உடனிருந்தனர்.

















Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.