ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

திருநெல்வேலயில் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமல் சூறாவளி பிரசாரம்

 
வடமாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிடும் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான கந்தசாமி கமலேந்திரன்(கமல்) யாழ்.திருநெல்வேலி பிரதேசத்தில் பெருந்திரளான மக்களின் ஆதரவுடனும் அவர்களின் பிரசன்னத்துடனும் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார்.

நேற்றைய தினம் (14) திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் திருநெல்வேலி பிரதேசத்தின் பலபகுதிகளிலும் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட ஆரம்பகாலத்தில் ஆயுதவழியிலும் பின்;னர் ஜனநாயக வழியிலும் உழைத்து வரும் மாவட்ட அமைப்பாளர் தனது மக்களின் உரிமைக்கான பிரசார நடவடிக்கையை பல நூற்றுக்கணக்கான மக்கள் அலையெனத் திரண்டு வர பிரதேசமெங்கும் மேற்கொண்டிருந்தார்

தமிழ் மக்களின் உரிமையினை நிலைநாட்டி வடமாகாண சபையில் சுயாட்சி அதிகாரத்தை பெற சிறந்ததொரு தெரிவாக மக்கள் ஏற்றுக்கொண்ட மாவட்ட அமைப்பாளரின் பிரசார நடவடிக்கைகளை போன்று வடக்கில் வேறெந்த வேட்பாளருக்கும் இல்லாத மக்கள் ஆதரவை காணமுடிந்தது

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் அவற்றிற்கு மக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டதுடன்இ ஒரு சில தமது ஆதரவாளர்களின் பிரசன்னத்துடன் மட்டும் தமது பிரசார நடவடிக்கைகளை தெடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

















Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.