அமைச்சர் மேதகு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தன்னுடைய வெற்றிக்காக, சுயநலத்திற்காக பொய் சொல்லவும் விரும்பவில்லை, கொழும்பில் பிறந்து, வளர்ந்து சிங்கள மக்களுடன் இரண்டற கலந்த நீதிபதி என்று தன்னை சொல்லும் விக்னேஸ்வரன் ஏன் இப்படி சாத்திரியாக மாறி சூனியம் செய்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் என்பது, பிரபாகரனுக்கு 2009 கடவுள் தீர்வு கிடைத்தது போல கிடைக்கும் போதுதான் தமிழ் மக்களுக்கு தெரியும் இவர்கள் சூனியம் செய்து தங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று.
உண்மைகள் என்றும் அழிவதில்லை, நன்றி மறந்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததும் இல்லை.
கடந்த இருபது வருடங்களாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நேரான வழியில் பெறுமதிமிக்க உதவிகளை செய்துவருபவரும், இலங்கையில் தமிழ் ஈழமோ, விடுதலைப் புலிகளோ இந்தியாவின் தேசிய பாது காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அது 100% சாத்தியம் அற்றது என்றும், இலங்கையில் சிங்கள மக்களுடன் ஐக்கியப்பட்டு அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதே ஒரே வழி என்ற உண்மையை சொல்லி தேர்தலில் நின்றபடியால், தமிழ் மக்கள் தங்கள் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டு தமிழ்தேசிய கூட்டமைபை வெற்றிபெற செய்தன, வடக்கின் வசந்தத்திற்கு தீ மூட்டின, வன்னியிலே 26 வருடங்கள் மரத்திற்கு பின்னால் மலம் கழித்தவர்களுக்கு நிலையான மலசலக்கூடமும், மரத்தின் கீழ் வாழ்ந்தவர்களுக்கு நிலையான வீடுகளும், குப்பி விளக்கை காணாதவர்களுக்கு மின்சார விளக்கும், மணல் வீதியில் சுடு மணலில் நடந்தவர்களுக்கு தார் வீதிகளையும் இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்குமா என்பதை நன்றி மறந்த தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நேரடியாக தெரியும்..


