ஏற்பட்டிருக்கும் இன்றைய சாதகமான காலச் சூழல் தவறவிடப்படுமாயின் அபிவிருத்திக்கு சாதகமான மற்றுமொரு சூழல் உருவாகும் காலத்தை எதிர்பார்த்து மக்கள் மிக நீண்டகாலங்கள் ஏங்கிக்காத்திருக்கவேண்டி ஏற்படும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த 5ஆம்திகதி கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் நாம் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் மக்கள் மீள்குடியேறி தமக்கான மீள்வாழ்வியல் தளங்களை ஏற்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர் அன்றைய சூழலில் மக்களுக்கு உடனடி மனதாபிமானப்பணிகளே தேவைப்பட்டன இதன்காரணமாக நாம் மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பாக பேசுவதை தவிர்த்துக் கொண்டோம். இருப்பினும் அந்தத்தேர்தலில் மக்கள் என்மீதும் எமது கட்சியின் மீதும் நம்பிக்கைகொண்டு வாக்களித்து என்னை பாராளுமன்றுக்கு அனுப்பினீர்கள் அதன்படி மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிவர்த்திசெய்யும் வகையில் மக்களுடனேயே நின்று கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன் அதன் விளைவாக இன்று மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை ஏற்படுத்தப்படுத்த முடிந்துள்ளது. ஆனால் தொடர்ந்தும் இதேபோக்கில் மக்களுக்கான மேம்பாட்டுப்பணிகள் முன்னெடுத்ததுச் செல்லப்பட வேண்டும். எனவே இடையில் வரும் தேர்தல் எந்தவகையிலும் அபிவிருத்தியின் முன்னேற்றப்போக்கிற்கு தடையாக அமையுமாயின் அது நடைபெற்றுவரும் முன்னேற்றப்போக்கில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். அத்தோடு ஏற்பட்டிருக்கும் இன்றைய சாதகமான காலச் சூழல் தவறவிடப்படுமாயின் அபிவிருத்திக்கு சாதமகமான மற்றுமொரு சூழல் உருவாகும் காலத்தை எதிர்பார்த்துமக்கள் மிக நீண்ட காலங்கள் ஏங்கிக்காத்திருக்கவேண்டிஏற்படும்
எனவே இன்றுள்ள நிலைமையிலிருந்து நாம் தொடர்ந்தும் முக்னேறிச் செல்வதற்கு எமக்கான அரசியல் பலத்தை மீளவும் உறுதிசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இந்த யதார்த்த சூழலை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் எமது எதிர்காலசந்ததியினரின் சுபீட்சமான எதிர்காலத்தைகருத்தில்கொண்டு மக்கள் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் எமது கட்சிசார்ந்த வேட்பாளர்களை ஆதரித்து தொடரும் மேம்பாட்டுக்கு பக்க துணையாக செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்
கடந்தகால யுத்தத்தின்போது சாவுக்காக நேரம்குறித்து தமதுஉயிர்களை தியாகம் செய்த போராளிகளின் தியாகங்களை இன்று சிலர் தமது அர்ப்ப அரசியல் இலாபநோக்ககளுக்காக பயன்படுத்திவருகின்றனர். இவ்வாறு தியாகங்களின் பெயரால் அரசியல் இலாபம்தேடமுனைபவர்களின் செயற்பாடுகளை மக்கள் அங்கீகரிப்பார்களாயின் அது அந்த தியாகிகளுக்கு துரோகம் இளைத்ததாகவே அமையும் எனவே இவ்வாறான வர்களின் செயற்பாடுகள் குறித்தும் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர்
தமது தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக்கொண்டு செயற்படுவதனால் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான கருத்துக்களையும் சமூகத்தல் விதைக்கமுனைகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் வடக்குமாகாணசபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், மற்றும் அன்ரன்அன்பழகன்,பிரகலாதன் ஆகியோரும் உரையாற்றினர் இதன்போது கரைச்சி பிதேசசபை உறுப்பினர் இராமச்சந்திரன், மற்றும் கிருஸ்ணசாமி ஆகியோரும் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் பத்மநாதன் கிளிநொச்சி சந்தைவர்த்தகசங்கத்தலைவர் இரத்தினமணி ஆகியோரும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் பெரும்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

