மத்திய அரசுடன் அதிகாரமுள்ளவர்களால் மட்டுமே எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியுமென்பதுடன், அதற்காகவே நாம் ஐ.ம.சு.முன்னணியில் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என ஈ.பி.டி.பியின் வேட்பாளர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னிணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அழிந்து போன எமது தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதுடன் எமது மக்களுக்கான வளமான வாழ்வை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகவுள்ளது. அதற்காகவே நாம் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடுகின்றோம். இதற்காக நாம் எமது தனித்துவத்தை இழக்கவில்லை. மாறாக எங்களுக்கான தனித்துவத்தை நாம் பேணி வருகின்றோம். இன்றுவரை நாம் எத்தனையோ சவால்களையும் சோதனைகளையும் தாண்டித்தான் இன்று வெற்றி பெற்றுள்ளோம். இந்நிலையில், மத்தியிலே அதிகாரம் பொருந்திய அரசுடன் நல்லுறவுகளை கொண்டுள்ளோம். இதனூடாக எமது மக்களுக்கான உரிமைகளை நிச்சயம் வென்றெடுக்கப்படும். அதுமட்டுமன்றி நடைமுறைச்சாத்தியமான வழியிலும் இணக்க அரசியல் ஊடாகவும் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் நாம் உழைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார். யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐ.ம.சு.முன்னணியில் ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான அலெக்ஸான்டர் சாள்ஸ், சுந்தரம் டிவகலாலா, கோடீஸ்வரன் றுசாங்கன், முதன்மை வேட்பாளர் தவராசா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உரையாற்றினர்.
மத்திய அரசுடன் அதிகாரமுள்ளவர்களால் மட்டுமே எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் - வேட்பாளர் கமலேந்திரன்
மத்திய அரசுடன் அதிகாரமுள்ளவர்களால் மட்டுமே எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியுமென்பதுடன், அதற்காகவே நாம் ஐ.ம.சு.முன்னணியில் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என ஈ.பி.டி.பியின் வேட்பாளர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னிணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அழிந்து போன எமது தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதுடன் எமது மக்களுக்கான வளமான வாழ்வை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகவுள்ளது. அதற்காகவே நாம் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடுகின்றோம். இதற்காக நாம் எமது தனித்துவத்தை இழக்கவில்லை. மாறாக எங்களுக்கான தனித்துவத்தை நாம் பேணி வருகின்றோம்.
இன்றுவரை நாம் எத்தனையோ சவால்களையும் சோதனைகளையும் தாண்டித்தான் இன்று வெற்றி பெற்றுள்ளோம்.
இந்நிலையில், மத்தியிலே அதிகாரம் பொருந்திய அரசுடன் நல்லுறவுகளை கொண்டுள்ளோம். இதனூடாக எமது மக்களுக்கான உரிமைகளை நிச்சயம் வென்றெடுக்கப்படும். அதுமட்டுமன்றி நடைமுறைச்சாத்தியமான வழியிலும் இணக்க அரசியல் ஊடாகவும் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் நாம் உழைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐ.ம.சு.முன்னணியில் ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான அலெக்ஸான்டர் சாள்ஸ், சுந்தரம் டிவகலாலா, கோடீஸ்வரன் றுசாங்கன், முதன்மை வேட்பாளர் தவராசா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உரையாற்றினர்.

