ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

யாழ்.மாவட்டத்தில் 13,150 இராணுவத்தினரே கடமையாற்றுகின்றனராம்! தளபதி ஹத்துருசிங்க

யாழ்.மாவட்டத்தில் தற்போது 13ஆயிரத்து 150 இராணுவத்தினரே கடமையாற்றி வருகின்றனர் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

மாற்றலாகி செல்லவுள்ள கட்டளைத்தளபதிக்கு பிரிவு உபசார நிகழ்வுகள் நேற்று வசாவிளானில் நடைபெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடமைக்கு யாழ். மாவட்டத்திற்கு வந்த போது 4 பிரிவுகளாக கொண்டிருந்த இராணுவத்தினரில் 27 ஆயிரத்து 200 பேர் கடமையில் இருந்தனர்.

எனினும் அன்றைய காலம் தேவைகள் அதிகமாக காணப்பட்டமையால் அதிகளவான இராணுவத்தினர் கடமையில் இருந்தனர்.

பின்னரான காலப்பகுதியில் யுத்தம் இன்றி சமாதானம் நிலவி வருகின்ற போது நாளுக்கு நாள் இராணுவத்தினருடைய எண்ணிக்கையில் குறைப்பு ஏற்பட்டது.

அதன்படி தற்போது யாழ்.மாவட்டத்தில் 13ஆயிரத்து 150 இராணுவத்தினரே கடமையில் உள்ளனர் என்றார்.

தமிழில் பேச முடியவில்லை! மன்னிப்பு கோருகின்றேன்!

யாழ். மாவட்டத்தில் கடந்த 4 வருடங்களாக கடமையாற்றி வந்தாலும் தமிழ்மொழியில் இதுவரை பேசமுடியவில்லை என்பதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க.

நாளை 6ஆம் திகதியுடன் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி என்ற கடமையில் இருந்து விடுபட்டு இராணுவ தலைமைக்காரியாலயத்திற்கு மாற்றலாகி செல்லவுள்ள நிலையில், அவர் இந்த மன்னிப்பை கேட்டிருந்தார்.

அதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில சந்தர்ப்பத்தில் தமிழ் மொழியை நான் விளங்கிக் கொள்பவனாகவே இருக்கின்றேன். இருந்தாலும் கூட பேச முடியவில்லை எனினும் தமிழ் மொழியினை படிக்கும் ஆர்வத்துடனேயே இருக்கின்றேன்.

அந்த ஒரு மொழி தான் உங்களையும் எங்களையும் இணைக்கின்ற ஒரு பாலமாக அமைகின்றது. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து எமது கடமையினை நிறுத்திக் கொள்ள இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கின்றது.

கடந்த காலங்களில் நாம் ஒருமித்து ஒன்றாக கடமை புரிந்துள்ளோம். இருப்பினும் கூட சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுடன் இணைந்து கொள்வேன் என்றார்.

யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி கடமை பொறுப்பை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.