கைத்தொலைபேசி திருடியவரும் வாங்கியவரும் கைது.
யாழ் . இடைக்காடு தம்பாளைப் பகுதியிலுள்ள வீடொன்றில் கைத்தொலைபேசியினை
திருடிய நபரும் ,திருடியவரிடமிருந்து கைத்தொலைபேசியினைக் கொள்வனவு செய்த நபரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி. நிஸங்க தெரிவித்தார் .
மேற்படி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியொன்று திருடப்பட்டிருந்தது . இது தொடர்பாக அந்த வீட்டின் வயோபதிபர் ஒருவரினால் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் , இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி குற்ற ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வந்தனர் .
தொலைபேசியின் ஜி.பி. எஸ் . தொழில்நுட்பம் , மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் மேற்படி தொலைபேசியினை வைத்திருந்த தம்பாளைச் சேர்ந்த இளைஞரை அச்சுவேலிப் பொலிஸார் நேற்று ( 03 ) மாலை கைது செய்தனர் .
தொடர்ந்து மேற்படி நபரை விசாரணை செய்த போது , குறித்த நபர் இந்தத் கைத்தொலைபேசியினை நண்பர் ஒருவரிடம் வாங்கியதாகச் பொலிஸில் தெரிவித்தார் . இதன் பிரகாரம் அதே இடத்தினைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்தனர் .
மேற்படி இரு இளைஞர்களும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார் .


