ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

அடர்ந்த காட்டுப்பகுதியில் செய்கைபண்ணப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா சேனை சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது பாரியளவில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.

சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக் காட்டில் செய்கை பண்ணப்பட்ட மூன்று அடி உயரமான 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு மரத்திலிருந்து 1 கிலோ கஞ்சாவை அறுவடை செய்ய முடியும் என்பதுடன் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா மரங்களின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா பெறும் என மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.