ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

விற்பனைக்கு வந்துவிட்டது உலகின் முதலாவது சாரதியற்ற கார்! : விலை 3 கோடியே 25 இலட்சம் மட்டுமே







நீண்ட காலமாக சாரதியற்ற காரினை மக்கள் பாவனைக்குக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது கூகுள் நிறுவனம்.


இந்நிலையில் கூகுளினை முந்திக்கொண்டு பிரான்ஸ் நாட்டு ரோபோட்டிக் நிறுவனமான இன்டக்ட் உலகின் முதலாவது வணிகரீதியிலான சாரதியற்ற காரினை விற்பனைக்கு கொண்டுவந்து பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.




அதி நவீன ரகமான இந்த சாரதியற்ற காருக்கு 'நவியா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 8 பேர் பணிக்கக்கூடிய இக்கார் முழுமையான இலத்திரனியல் காட்டுப்பாட்டில் சுயமாக இயங்கவல்லது.


அதிக பட்சமாக மணிக்கு 20 கிலோ மீற்றர் வேகம் வரை செல்லும் இக்காரானது விபத்துக்களிலிருந்து பாதுகாத்து குறித்த இடத்திற்கு பயணிக்கக்கூடியதாக நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.


பயணிகள் எங்கே போகவேண்டும் என நினைக்கின்றனோ அந்த இடத்தினை தொடுதிரை ஊடாக தேர்வு செய்தால் போதும் அவ்விடத்திற்கு நவியா பாதுகாப்பாக அழைத்துச்செல்லும். சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.

 

இக்கார் லாஸ் வெகாஸில் இடம்பெற்ற சர்வதேச நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இக்காரின் விலை 250 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 3.25 கோடி ரூபா) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்போது இக்கார் விற்பனைக்கு வந்துவிட்டாலும் இப்போதைக்கு இதனை பொதுவான திறந்த வீதிகளில் பயன்படுத்த முடியாது. பல்கலைக்கழகங்கள், தீம் பார்க் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களிலேயே பயன்படுத்தப்படவுள்ளன.


இக்கார் குறித்து நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி பியர்ரா லெபெவ்ரி கூறுகையில், நவியா முழுமையாக சுயமாக ஓடக்கூடியது, 100 சதவீதம் இலத்தினியல் பாவனை, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, பாதுகாப்பானது. பாவனைக்கு இலகுவானது. இது பாதசாரிகளுக்கான சிறந்த தீர்வாகவுள்ளது. இது வித்தியமானதொரு கார் ஏனெனில் சுய அறிவாற்றலுடன் செயற்படக்கூடியது.

 


கையடக்கத் தொலைபேசி கட்டளை மூலம் இயங்கும் வாகனங்கள், இரைச்சலின்றிய, சூழல் மாசு ஏற்படுத்தாத வாகனங்கள் கொண்ட நகரினை கற்பனை செய்து பாருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.


இன்று உலகின் பல முன்னணி நிறுவனங்கள் சாரதியற்ற கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதனால் 2035 ஆம் ஆண்டளில் பெரும்பான்மையாக சாரதியற்ற கார்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.