ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு 3,000 மாணவர்கள் உள்வாங்கப்படுவர்




இம்முறை பேராதனை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள 8 பீடங்களுக்கும் புதிதாக சுமார் 3,000 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இவ்வாறு உள்வாங்கப்படவுள்ள புதிய மாணவர்களை பகிடிவதைகளிலிருந்து பாதுகாப்பதற்கு விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிருவாக வட்டாரம் தெரிவித்தது.

தற்போது புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன, பேராசிரியர் சாந்த ஹேன்நாயக்க ஆகியோர் தலைமையில் 8 பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பீடாதிபதிகள், ஒழுக்காற்று பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதான அதிகாரிகள், விரிவுரையாளர்கள் என பாதுகாப்பு தொடர்புடைய பல அதிகாரிகள் இக்குழுவில் அங்கம் வகிப்பதாகவும் தெரியவருகிறது.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.