ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

9 வயதில் இணையத்தள வடிவமைப்பில் இலங்கைச் சிறுமி பாரிய சாதனை!

9 வயதில் இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் 2 ஆம் இடத்தைப் பெற்று சிறுமி ஒருவர் இலங்கையில் சாதனை படைத்துள்ளார். சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். பிரேமானந்த நடராஜ் மற்றும் லக்ஷ்ஸ்மி பிரேமானந்த் தம்பதிகளின் ஒரே ஒரு புதல்வியான வஷினியா கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயிலுகின்றார்.

வஷினியா 2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித் துறை கற்றை நெறி சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT DEGREE ) பூர்த்தி செய்துள்ளார். இவருக்கான பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் கொழும்பில் நடத்தப்படவுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் தாயார் வல்வெட்டிதுறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.