ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

புதுக்குடியிருப்பில் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கொள்ளை.



முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தற்காலிக கொட்டகை வீட்டில் வசித்து வந்தவர்களை கறுப்புத்
துணியினால் தங்களுடைய முகத்தினைக் கட்டியிருந்த கொள்ளையர்கள் நால்வர் , தாக்கிவிட்டு கழுத்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை இன்று அதிகாலை கொள்ளையடித்து சென்றுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர் .

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் , மனைவியினை கொள்ளையர்கள் , தாக்கி விட்டு , மனைவியின் கழுத்திலிருந்த 4.5 பவுண் தாலிக்கொடி மற்றும் அங்கிருந்த இரண்டு கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட ரூபா 3 இலட்சம் பெறுமதியான பொருட்களையே கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் .

கொள்ளையர்கள் தாக்கியதில் கணவன் , மனைவிக்கு தெய்வாதீனமாக எதுவித காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர் .

வன்னி நிருபர் .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.