ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

கமலின் விடுமுறை கோரலுக்கு சபை அனுமதி.


வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு சபை விடுமுறை
வழங்கி அனுமதியளித்துள்ளது .

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

அதன்படி அவை நடவடிக்கையில் பங்குகொள்ளாது இருப்பதனால் விடுமுறை வழங்குமாறு அவைத்தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார் . அதனையடுத்து எதிர்வரும் சபை அமர்வு வரை அவருக்கு விடுமுறை வழங்க சபை அனுமதியளித்தது .

கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நான் சந்தேகிக்கப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்து வருகின்றேன் . இதன் காரணமா 9.1 இடம்பெறும் சபைக் கூட்டத்தில் பங்குகொள்ள முடியவில்லை .

எனினும் சபைக் கூட்டங்களில் பங்குகொள்வது தொடர்பில் நீதிமன்றில் கொண்டுவந்திருந்த போதும் 31.12 அன்று அடுத்து இடம்பெறும் கூட்டத்திகதி குறித்து நீதவான் வினாவியிருந்தார் .

அதன்படி குறித்த தினம் சபை அமர்வுகளில் பங்கு கொள்ளுமாறு நீதவான் கட்டளையிட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் குறித்த கூட்டத்திற்கு பங்கு கொள்வது சாத்தியமற்றது .

எனினும் இது தொடர்பில் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கருத்தில் எடுத்து இன்றைய சபை அமர்வுக்கு விடுமுறை வழங்குமாறு கோரியிருந்தார் .

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ' கண்டவாறு விடுமுறை வழங்கமுடியாது என்றும் இந்த விடுமுறையினை அனுமதிக்க வேண்டாம் ' எனவும் சபையில் கேட்டுக்கொண்டார் .

இது தொடர்பில் முதலமைச்சர் தெரிவித்ததாவது ,

அவருக்கு இருக்கும் சட்டச் சிக்கல்கள் காரணமாக அவரது விடுமுறையை ஏற்று அவருக்கு விடுமுறை வழங்க அனுமதிப்போம் .

எனினும் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் சபையின் அடுத்த அமர்வின்போது கமலேந்திரன் கலந்துகொள்ளாவிட்டால் அது தொடர்பாக அவர் ஒரு முடிவினை சபைக்கு அறிவிக்க வேண்டும் . அதன் பின்னரே நாம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் .

இதனையடுத்தே எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் அவருக்கு விடுமுறை வழங்க சபை அங்கீகாரமளித்தது .

இதேவேளை , கந்தசாமி கமலேந்திரன் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார் . அவரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.