ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

நிரந்­தர முகாம் அமைக்க இரா­ணு­வத்­தினர் முயற்சி. மல்லாகத்தில் மக்கள் எதிர்ப்பு.




மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள சந்தைக் காணியில் நிரந்தர இராணுவ
முகாமை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் .

கடந்த எட்டு வருடங்களாக ஏழாலைச் சந்தியில் இயங்கி வந்த குறித்த இராணுவ முகாமை தற்பொழுது வலி . தெற்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள காணியில் அமைப்பதற்கு இராணுவத்தினர் முயற்சித்து வருகின்றனர் .

இதற்காக இராணுவத்தினர் குறித்த பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நில அளவையாளரின் உதவியுடன் அளந்து சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் . இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளதுடன் தமது எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ளனர் .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.