ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

பிரதமர் டி.எம். ஜயரத்னவை பதவி விலக கோரி சிங்கள ராவய அமைப்பு ஆர்ப்பாட்டம். [படங்கள் இணைப்பு]

புத்தசாசன அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் டி . எம் . ஜயரத்ன உடனடியாக விலக
வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது .
 
சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

பௌத்த பிக்குமாருக்கு எதிராக பகிரங்கமான இடங்களில் வைத்து தவறாக பேசியமை குறித்து பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கேட்டுள்ளது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான பிக்குமார் கலந்து கொண்டுள்ளனர் .

பிரதமர் டி . எம் . ஜயரத்னவுக்கு எதிராக பிரதமரின் அலுவலகத்திற்கு எதிரில் சிங்கள ராவய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது .

பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது .

தமது ஆணையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் பிரதமரின் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவத்தில் பிக்குமார் சிலர் காயமடைந்துள்ளனர் . எனினும் தாம் பிக்குமார் மீது தாக்குதல் நடத்தவில்லை என பொலிஸார் தெரிவித்தனர் .

ஆர்ப்பாட்டகார்களை தடுக்க போடப்பட்டிருந்த வீதி தடை ஆர்ப்பாட்டகார்கள் மீது விழுந்தத்தில் சிலர் காயமடைந்தனர் எனவும் பொலிஸார் கூறினர் .

ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள கொழும்பு 7 பிளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .


Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.