ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

ரெப் இன்று வடக்கிற்கு விஜயம். விக்னேஸ்வரனை சந்திப்பார்.

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல்
நீதிக்கான பணியகத்தில் , போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே . ரெப் இன்று வடக்குக்கு செல்லவுள்ளார் . இவர் அங்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்திப்பாரென டெய்லிமிரருக்கு கிடைத்த செய்திகள் தெரிவித்தன .

தூதுவர் ஸ்டீபன் ஜே . ரெப் , யுத்தக் குற்றங்கள் , மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் எழும் மனித உரிமை பிரச்சினைகள் பற்றி இராஜாங்க செயலாளருக்கு ஆலோசனை வழங்குபவராக உள்ளார் .

பெருந்தொகை மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடுஞ்செயல்களை தடுத்தல் , எதிர்கொள்ளல் , பொறுப்புக் கூறவைத்தல் தொடர்பான அமெரிக்க கொள்கைகளை வகுப்பதற்கு இவரது அலுவலகம் உதவியாக உள்ளது .

இலங்கையிலிருக்கும் போது ரெப் , அரசாங்க தரப்பு அலுவலர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் சமூக செயற்பாட்டாளர்களுடனும் பேசுவார் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது . இவர் அமைச்சர் ஜி . எல் . பீரிஸை ஜனவரி 10 ஆம் திகதி அல்லது 11 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது .

ரெப் முப்படைத் தளபதிகளையும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உட்பட சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் சந்திப்பாரென எதிர்பார்க்கப்பட்டுகின்றது
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.