ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

தடையைத் தாண்டி ரிலீசானது ‘ஜில்லா’ : கோர்ட் அதிரடி தீர்ப்பு!



டைட்டில் பிரச்சனையில் சிக்கித்தவித்த விஜய்யின் ஜில்லா படம் திட்டமிட்டபடி இன்று உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது.

சென்னை அடுத்துள்ள சேலையூரை சேர்ந்தவர் ஆர்.மகேந்திரன். இவர், சென்னை 16–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

செளமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில்

இந்த டைட்டிலை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008–ம் ஆண்டு பதிவு செய்தேன்.மேலும், தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழை 28–5–2008 அன்று பெற்றுள்ளேன். இதன் பின்னர் இந்த படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்து காத்திருந்தேன்.

இந்த நிலையில், சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள படத்துக்கு ‘ஜில்லா’ என்ற பெயர் வைக்கப்பட்டு, வருகிற 10–ந்தேதி வெளியாகப் போவதாக பத்திரிகையில் விளம்பரம் வந்துள்ளது. எனவே ‘ஜில்லா’ என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.நராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்கள் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நடிகர் விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற படம் நாளை ( இன்று ) வெளியாக உள்ளது. மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த கோர்ட்டை நாடியுள்ளார். எனவே ஜில்லா படத்துக்கு தடை விதிக்க முடியாது. ஜில்லா டைட்டிலுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று அதிரடியான தீர்ப்பு கூறினார். இதையடுத்து இன்று ஜில்லா படம் ரிலீசானது.
மொழியாக்கம் செய்தேன்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.