ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் விளக்கம்.



நிபந்தனைகளின் பிரகாரம் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முறைப்பாடு
குறித்தும் நம்பகத்தன்மை வாய்ந்த முறையில் விசாரணை மேற்கொள்ளப்படுமென்பதனை ஆணைக்குழு காணாமற்போனோரின் நெருங்கிய உறவினர்களுக்கு உறுதிப்படக் கூற விழைகின்றது . ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் மகிஸ்வெல்பரணகம தலைமையிலான இந்த ஆணைக் குழு விசார ணை முடிவில் ஜனாதிபதிக்கு நம்பகத்தன்மை வாய்ந்த அறிக்கை யொன் றை வழங்கும் திறனைக் கொண்டு விளங்குவதனால் சர்வதேச விசாரணை யொன்றிற்கான தேவை அவசியமற்றதொன்றாகவே காணப்படுகின்ற தெனலாம் .

காணாமற்போனோரைத் தேடுவதற்கான சங்கத்தின் ஏற்பாட்டாளர் இடம்பெற்ற நிகழ்வில் சுந்தரம் மகேந்திரன் என்பவரால் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனோர் சம்பந்தமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுபயனற்றது எனும் தலைப்பில் கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் திகதி வீரகேசரியில் பிரசுரமாகியிருந்த செய்தி குறித்து காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயலாளர் எச் . டபிள்யூ . குணதாச விளக்கம் அளித்துள்ளார் .

அதன் விபரம் வருமாறு :

காணாமற் போனோர் குறித்து அவர்களது நெருங்கிய உறவினர்களால் செய்யப்படும் முறைப்பாடுகள் குறித்து சுயாதீனமான விசாரணையொன்றை நடத்துவதிலான மேற்படி ஆணைக்குழுவின் நம்பகத் தன்மையைப் பலவீனப்படுத்தும் வகையில் சுந்தரம் மகேந்திரன் என்பவரால் தெரிவிக்கப்பட்டிருந்த ஆதாரமற்றக் கருத்துக்களை ஆணைக்குழு நிராகரிக்கின்றது . ஆணையொன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி அதில் விசாரணை செய்வதற்கும் தேவைப்படின் இன்னுமொரு நபரின் உரிமைகளை மீறும் வகையில் குற்றம் புரிந்துள்ளதாகக் கண்டறியப்படும் எந்த நபருக்கும் அல்லது நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்வதற்குமான அதிகாரங்களை ஆணைக்குழுவிற்கு வழங்கியுமுள்ளார் .

அத்துடன் வெளி நாடுகளில் 4000 பேர் வசித்து வருகின்றனரென ஆணைக்குழு தெரிவித்ததாகக் கூறும் சுந்தரம் மகேந்திரனின் கூற்றையும் ஆணைக்குழு அடியோடு மறுக்கின்றது . இத்தகைய அறிக்கைகள் பொதுதவறான வழிக்கு இட்டுச்செல்வதுடன் அரசாங்கத்திற்கும் அரசினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக் குழுவுக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணுவதற்கென முனைப்புடன் செயற்பட்டுவரும் தரப்பினரால் சுயலாபம் தேடும் வகையில் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையாகவுள்ளது . புலம்பெயர் தமிழர் அமைப்புகளினதும் முனைப்புடன் செயற்பட்டு வரும் தரப்பினரதும் எண்ணப்பாடான சர்வதேச விசாரணை யொன்றுக்கே சுந்தரம் மகேந்திரன் அழைப்பு விடுக்கின்றார் .

ஜனாதிபதியால் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையில் விதித்துரைக்கப்பட்டுள்ளன .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.