யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள் மேற்படி புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியினை இன்றைய தினம் (09) திறந்து வைத்தார்.
முன்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சகிதம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட அதிதிகள் மங்கள வாத்தியத்துடனும் மாணவர்களின் இசை அணிவகுப்புடனும் நீதிமன்ற வளாகத்தினுள் அழைத்து வரப்பட்டனர்.
தேசியக் கொடியினை பிரதம நீதியரசர் ஏற்றி வைக்க பெயர்ப்பலகையினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திரை நீக்கம் செய்து வைத்தார்.
புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன்ää நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து மத குருமார்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.
மேற்படி இக்கட்டிடம் 127 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துரையாற்றினார்.
இதில் நீதி நிர்வாகத்துறையைச் சேர்;ந்த பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

