ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி விக்னேஸ்வரன் மஹிந்தவுடன் கை கோர்ப்பு.


வடக்கின் முதலமைச்சர் விக்கி ஐயாவும் சுமந்திரனும் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவை இரகசியமாகச்
சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர் . இதுபோன்ற பல சந்திப்புக்கள் அவ்வப்பொழுது திரைமறைவில் நடைபெற்றாலும் இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தேவைகருதி ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷபகிரங்கப்படுத்தியுள்ளார் .

தற்பொழுது தோற்றுவிக்கப்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபட தமிழ் மக்களின் விருப்பினைப் பெற்றவராகத் தன்னை அடயாளப்படுத்த வேண்டிய தேவை மஹிந்தவிற்கு எழுந்துள்ளது . தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடன் கொஞ்சிக்குலாவி அதனைப் புகைப்படம் பிடித்து ஊடகங்களில் வெளியிட்டதன் மூலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவை அதனைச் சரியாகச் செய்துள்ளார் . கூட்டமைப்பும் அதற்கு உடந்தையாகியுள்ளது .

இச்சந்திப்பில் என்ன விடயங்கள் தொடர்பாக இருதரப்பினரும் கலந்துரையாடினார்கள் என்பதற்கப்பால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவைச் சந்தித்தவர்கள் யார் என்பதே முக்கியமானதாக அமைகின்றது .

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , வடக்கில் மாகாண சபைத் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மக்களின் பிச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்ற சாக்குப்போக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவுடன் கை கோர்த்துள்ளனர் .

இந்த நிலையில் இவர்கள் என்ன கதைத்திருப்பார்கள் என்பதை நான் எழுதவேண்டிய தேவையில்லை என நினைக்கின்றேன் . ஆனாலும் மர்ச்சு மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மஹிந்தவை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்துகின்றவர்கள் காப்பாற்றத் தொடங்கிவிட்டனர் என்பதை மட்டும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என நம்புகின்றேன் .

இந்த விடயங்கள் ஒருபுறமிருக்க கூட்டமைப்பு என்ற கட்சிக்குள் பல கருத்து வேறுபாடுகள் வலுத்துள்ளதாகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து முதலமைச்சர் விக்கிக்கு எதிராக சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது .

முதலமைச்சரின் மஹிந்த ஆதரவுக் கொள்கை , நிர்வாக ஆளுமையின்மை , ஏனைய உறுப்பினர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துகின்ற திறனின்மை , விடயங்களைப் பொதுமைப்படுத்தாமை , மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தாமை , தன்னிச்சயாக முடிவெடுத்துச் செயலாற்றுகின்றமை போன்ற பல காரணங்களால் முதலமைச்சர் மீது ஏனைய உறுப்பினர்கள் நம்பிகை இழந்துள்ளனராம் .

இதன் வெளிப்பாடாக மூத்த அரசியல் வாதியான சிவாஜிலிங்கம் தலைமையிலான சுமார் 15 பேர்கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது . இந்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா , சுரேஷ் பிரேமச்சந்திரன் , ஆனந்தசங்கரி , சித்தர்த்தன் ஆகியோரிடன் பெயர்களும் உச்சரிக்கப்படுகின்றமை வேடிக்கையான அரசியல் நகர்வாகும் .

கூட்டமைப்பிற்கு எதிரான அல்லது மாற்றுக்கருத்துள்ள அணியில் 15 பேரைச் சேர்த்துக்கொள்ள முடியாவிடினும் குறைந்தது 5 பேரையாவது முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடலாம் அல்லது அரசியலில் அனுபவமுள்ள வட மாகாகண சபையின் சில உறுப்பினர்கள் தன்னிச்சையாகச் சில முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்த மாற்றுக்கருத்துள்ள அணிக்குப் பக்கபலமாக மாவை சேனாதிரா , பேராசியர் சிற்றம்பலம போன்றவர்களும் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .
இந்நிலையில் கூட்டமைப்பிற்குள் பிரிவு ஏற்படாவிடினும் ஒத்தகருத்துடன் செயற்பட முடியாத நிலை வடக்கு மாகாண சபையில் தற்பொழுது ஏற்பட்டுள்ளது என்பதை நியாயமான அறிவுள்ள சகலராலும் ஊகித்து அறியமுடியும் .

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு வடக்கு மாகாண சபைத்தேர்தலில் கூட்டமைப்பிற்குக் கிடைத்த வெற்றியால் தலைவர் சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள தலைக்கனமும் தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் சம்பந்தனின் துணையுடன் தன்னிச்சையாக மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றமையுமே காரணமாக அமைந்துள்ளது என்பதும் விமர்சனமாகியுள்ளது .

இந்நிலையில் தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சி , ஜே.வி. பி போன்ற அரசியல் கட்சிகளை சிதைத்து அதனுடாகப் பெற்ற வெற்றியைத் தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதைப் போன்று வடக்கின் அரசியல் போக்கினை மற்றுவதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ முற்படுகின்றார் என்பது தெளிவாகியுள்ளது .

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் மஹிந்தவிடம் அவ்வப்பொழுது விலைபோவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சித்தைக்கலாம் அல்லது செயலிழக்கச் செய்யலாம் என மஹிந்த எண்ணக்கூடும் . ஆனால் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று எவராலும் தமிழ் மக்களின் ஆதரவுடன் அரசியலில் பயணிக்க முடியாது என்ற நிலையில் கூட்டமைப்பினுள் பிரிவை ஏற்படுத்துவதென்பது தற்போதய அரசியல் சூழலில் முடியாத விடயமாகும் .

ஆனால் கூட்டமைப்பிற்குள் உட்கட்சிப் பூசல்களைத் தோற்றுவித்து அதனூடாக தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்ய முடியும் . விக்கி , சுமந்திரன் போன்றவர்கள் கட்சிக்குள் இருக்கும்வரை ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவால் இதனை இலகுவில் செய்ய முடியும் .
எனவே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் தற்பொழுது கூட்டமைப்பினர் எடுக்கின்ற தவறான அல்லது வினைத்திறனற்ற தீர்மானங்களால் பின்னடைவுகளைச் சந்திக்கக் கூடிய நிலைகாணப்படுவதால் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற ஒவ்வெருவரும் எடுக்கின்ற தீர்மானங்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்ததைப் பாதிக்காத வகையில் அமையவேண்டும் .
இதுவே தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும் .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.