ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

மக்களின் காணிகளை இரானுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பதை எதிர்க்கின்றோம் -ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.


ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியைப் பொறுத்தவரை மக்களுக்குரிய நிலங்கள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதைநாம் தொடர்ந்தும் ஆணித்தனமாக வலியுறுத்தி வருகின்றோம். அத்தோடு மக்களின் காணிகளை இரானுவத்தினர் இரானுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பதையும் நாங்கள் எதிர்க்கின்றோம். ஆனால் அபிவிருத்தி தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்று மீள்குடியேற்ற அமைச்சருடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துதெரிவிக்கயில்ää

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியைப் பொறுத்தவரை மக்களு;ககுரிய நிலங்கள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட்வேண்டும் என்பதைநாம் தொடர்ந்தும் ஆணித்தனமாக வலியுறுத்தி வருகின்றோம். மாற்றுக்காணிகள் வழங்கப்படுவதும் ஒருவருக்கு சொந்தமா நிலத்தில் வேறு ஒருவர் குடியமர்த்தப்படுகின்ற நிலையினையும் நாம் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை நாம் வெளிப்படையாகவே தெளிவுபடுத்தியிருக்கின்றோம். எனஅவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு வலிவடக்கில் 6800 வரையான ஏக்கர் நிலங்களை இரானுவத்தினர் சுவீகரிக்க முனைவதையும் நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துவருகின்றோம். அதாவது மக்களின் காணிகளை இரானுவத்தினர் இரானுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிப்பதை நாங்கள் எதிர்க்கின்றோம். இதுதொடர்பாக நான் பாராளுமன்றில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தின்போதும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அபிவிருத்தி தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதை நாம் எதிர்க்கவில்லை அவ்வாறான நடவடிக்கைகள் தென்பகுதியிலும் மற்றும் உலகின் எப்பாகத்திலும்  இயல்பாக நடைபெறும் விடயம் ஆனால் அபிவிருத்தி என்பது வேறு  இரானுவத்தேவை என்பது வேறுää எனவே வலிவடக்கிலே குறிப்பிடப்படும் 1800 ஏக்கர் நிலங்களும் இரானுவத்தேவைக்காக சுவீகரிக்கப்பட்டு இரானுவ முகாம்களை அமைப்பதை எங்கலால் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவும் குறிப்பிட்டார்


அத்தோடு வளலாய் கிராமத்தில் இரானுவத்தினர் விடுவிப்பதாக் குறிப்பிட்டடிருந்த பகுதியை இன்று நாங்கள் சென்று பார்வையிட்டோம் அங்கு பற்றைக்காடுகள் அழிக்கப்பட்டு மக்களை மீள்குடியேற்றுவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அங்கு நொந்தக்காணிகளை கொண்ட மக்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அத்தோடு முகாம்களில் வாழ்கின்றவர்களில் இதுவரை சொந்தமாக காணிகளின்றி வாழ்கின்ற மக்களுக்கும் காணிகள் வழங்கப்படவுள்ளன. எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேலும் குறிப்பிட்டார்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.