ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

மரக்குற்றிகளை கடத்திய மூவர் கைது.

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மூவரை கிளிநொச்சி
நீதிவான் நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின் வனவளத் திணைக்கள அதிகாரி எஸ் . பிரபாகரன் தெரிவித்தார் .

ஸ்கந்தபுரம் , முட்கொம்பன் காட்டுப் பகுதியிலிருந்து இன்று புதன்கிழமை சட்டவிரோதமாக 200,000 ரூபா பெறுமதியான முதிரை மற்றும் பாலை மரக்குற்றிக்களை கன்டர் ரக வாகனத்தில் கிளிநொச்சிக்கு கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மேற்படி மூவரும் புதுமுறிப்புப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .

கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத காட் ; டு மரங்கள் கடத்திய சம்பவங்கள் இடம்பெற்றன . குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் ; படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார் .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.