ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

2013 இல் 4 இலட்­சத்து 97 ஆயி­ரத்­து 642 கட­வுச்­சீட்­டுக்கள் விநி­யோ­கம்.அர­சாங்க தகவல் திணைக்­களம் அறி­விப்­பு.

வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 09 ஜனவரி 2014 02:16
ss97சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலுள்ள பொதுச்சேவை ஆணைக்குழுக்களின்
தலைவர்கள் கலந்துகொள்ளும் 3 ஆவது மகாநாடு ஜனவரி 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது .

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ள இம்மகாநாட்டில் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலுள்ள பொதுச்சேவை மற்றும் சிவில் சேவை ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்குகொள்ளவுள்ளனர் .

இம்மகாநாட்டில் பொதுச் சேவை தொடர்பில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு , திட்டப்பரிமாற்றம் குறித்து ஆராய்வதுடன் பிராந்திய நாடுகளில் பொதுச்சேவையை விருத்தி செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளன .

மேலும் , பொது நிர்வாகம் தொடர்பாக பிராந்திய நாடுகளுக்கிடையே சிறந்ததொரு அத்திபாரம் இம்மகாநாட்டினூடாக ஏற்படுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது . 8 நாடுகள் அங்கம் வகிக்கும் சார்க் அமைப்பின் பொதுச்சேவை ஆணைக்குழுக்களின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இம்மகாநாடு இலங்கையில் நடைபெறுவது இதுவே முதற் தடவையாகும் .

இதன் முதலாவது மகாநாடு 2010 ஆம் ஆண்டு இந்தியாவிலும் இரண்டாவது மகாநாடு 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.