ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் அமைச்சருடன் சந்திப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்கள் தமது நியமனம் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி சந்திப்பு இன்றைய தினம் (06) இடம்பெற்றுள்ளது.



இதன்போது கருத்துரை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமனங்களின் போது நாட்டில் பொதுவான சட்டமே நடைமுறையிலுள்ள போதிலும்ää  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.



அந்தவகையில் தான் யாழ்.போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.



இனிவரும் காலங்களிலும் கல்வித் தகைமைகளின் அடிப்படையில் மேலும் சுகாதார தொண்டர்களை நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதுவரையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கீழ்ப் படிந்து நடந்து கொள்ள வேண்டுமெனவும் அதனூடாகவே நிரந்தர நியமனங்கள் தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.



இந்நிலையில்ää சுகாதார தொண்டர்களுக்கு மாற்று ஏற்பாடொன்று செய்யும் வரையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் பணியாற்றுமாறும் உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
 
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.