ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

கச்சாய் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு




தென்மராட்சி கச்சாய் கடற்பரப்பில் வெளிப்பகுதி கடற்றொழிலாளர்கள் தங்கிநின்று தொழில் செய்யும் நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்படுமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கச்சாய் தெற்கு கொடிகாமத்தில் இன்றைய தினம் (9) இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அப்பகுதி மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இதில் தமது கடற்பரப்பில் வெளிப்பகுதி தொழிலாளர்கள் தங்கிநின்று தொழில்நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தாம் தொழில் செய்ய முடியாது பாதிக்கப்படுவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள்; சுட்டிக்காட்டினார்.

குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் இதுவிடயம் தொடர்பாக துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி விரைவில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் கடற்கரைப்பகுதியிலுள்ள மயானத்திற்கு சென்று வரும் வகையில் எல்லைகளை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய பிரச்சினைகளான வீதிப்புனரமைப்பு, மின்சார வசதி, வீட்டுத்திட்டம் மற்றும் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

இதன்போது இதன்போது ஈ.பி.டி.பியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் வேட்பாளர்கள் அலெக்ஸான்டர் சாள்ஸ், திருமதி சிறீதரன் ஞானசக்தி, ஆகியோர் கருத்துரையாற்றினர்.



















Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.