தென்மராட்சி விடத்தற்பளை சம்பாவெளி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற சிறப்புப் பூசைவழிபாடுகளில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
தென்மராட்சிக்கு இன்றைய தினம் (9) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் விடத்தற்பளையிலுள்ள பிள்ளையார்கோவிலுக்கு சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் அங்குகூடியிருந்த மக்களுக்கு கருத்துரையாற்றினார்.
இதன்போது கடந்தகாலங்களில் மக்கள் தவறானவர்களை தெரிவு செய்ததன் காரணமாகவே எமது மக்கள் இடம்பெயர்ந்து இன்னலுறவேண்டிய அவலம் நேர்;ந்தது. இந்நிலையில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
இதன்மூலமே இப்பகுதியின் அபிவிருத்தியை மட்டுமல்லாது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தையும் அபிவிருத்தியில் மேம்படுத்த முடியுமென்றும் தெரிவித்தார்.

