குறிகட்டுவானிலிருந்து நயினாதீவு வரையான புதிய பாலம் பாதைச்சேவையினை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நிர்மல கொத்தலாவல ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்துள்ளனர்.
குறிகட்டுவானுக்கு இன்றையதினம் (17) விஜயம் மேற்கொண்ட அமைச்சர்கள் மேற்படி பாதைச்சேவையினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாதைச் சேவைக்காக 61 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
63 தொன் நிறைகொண்டதாக அமையப் பெற்றுள்ள இப்பாதைச் சேவையின் ஊடாக நயினாதீவிலிருந்து குறிகாட்டுவானுக்கும், குறிகாட்டுவானிலிருந்து நயினாதீவுக்குமான பாதை போக்குவரத்தை மக்கள் இலகுவாக மேற்கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஏக்கநாயக்க உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

