உள்ளாடைக்குள் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது!
கொழும்பிலிருந்து கண்டிக்கு உள்ளாடைக்குள் மறைத்து ஹெரோயின் போதைப்பொருளை
கடத்திவந்த இளைஞர் ஒருவரை கடுகண்ணாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் .
கொழும்பு - கண்டி சொகுசு பஸ் வண்டியில் நபர் ஒருவர் ஹெரோயின் கடத்தி வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து , பொலிஸார் குறிப்பிட்ட பஸ் வண்டியை நிறுத்தி சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர் .
சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியபோது அந்நபர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் பக்ககட்டுகளுக்கு மேல் மலம் கழித்து அதனை மறைத்துள்ளார் .
சந்தேக நபரின் இச்செயலைப் புரிந்துகொண்ட பொலிஸார் அந்நபரைக் கொண்டே உள்ளாடையை துப்புரவு செய்யவிட்டு அவதானித்தபோது அதற்குள் 8 ஹெரோயின் பக்கெட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
இச் சந்தர்ப்பத்தின் போது சந்தேக நபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார் . எனினும் பொலிஸார் அவரை மடக்கிப்பிடித்தனர்


