ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

காணாமல் போனோர் என்று இலங்கையில் புது இனம் ஒன்று உருவாகியுள்ளது. விக்னேஸ்வரன்.


இலங்கையில் காணாமற் போனோர் என்ற ஒரு மனித இனம் உருவாகியுள்ளதாகவும்
அந்நிலைமையினை அரசாங்கம் கவனத்தில் எடுத்து சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார் .

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெறபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

' காணாமற் போனோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் . கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் ' என வலியுறுத்தும் பிரேரணையொன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் வடமாகாண சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது . இந்தப் பிரேரணையினை வழிமொழிந்து பேசியபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

இதேவேளை , அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் மகஜர் ஒன்றினை வட மாகாணசபை உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்தார் .

அத்துடன் , விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் , கே . பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் , பதுமன் ஆகியோருக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி பதவிகளையும் வழங்கியுள்ள நிலையில் , ஏன் ஏனைய அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது எனவும் சிவாஜிலிங்கம் இதன்போது கேள்வி எழுப்பினார் .

அவரது கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் , ' கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகளாகவும் உள்ளோரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன் .

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி , ' இது சட்டரீதியான பிரச்சினை . இதனை சட்டரீதியாக தான் முன்னெடுக்க வேண்டும் ' எனவும் கூறியதோடு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு லலித் வீரதுங்குவிற்கு உத்தரவிட்டார் ' என்று கூறினார் .

எவ்வாறாயினும் , காணமற் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்கள் ஜனாதிபதியினூடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும் ' எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார் .
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.