ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

மாலை­தீவு ஜனா­தி­பதி யமீன் அப்துல் கையூம் இம்­மாத பிற்­ப­கு­தியில் இலங்கை வருகை.



மாலைதீவு ஜனாதிபதி யமீன் அப்துல் கையூம் இம்மாத பிற்பகுதியில் இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறுகோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதி யமீனுக்கு இதற்கு முன்னர் அழைப்புக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் . கடந்த மாதம் மரியாதையின் நிமித்தம் ஜனாதிபதி யமீனைச் சந்தித்திருந்த இலங்கை உயர் ஸ்தானிகர் டிச்சன் சரத்சந்திர டிலா மேற்படி கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தார் .

மேற்படி அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி யமீன் மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையேயான இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக சிநேகபூர்வமான முறையில் பலமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்ததுடன் இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய தொடர்புகள் தனது விஜயத்தின் மூலம் மேலும் விரிவடையுமெனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.