ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து


முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து சுயநினைவிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு ( 04 ) அனுமதிக்கப்பட்டுள்ளார் .

பரந்தனிலிருந்து உடையார்கட்டு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் புதுக்குடியிருப்பிலிருந்து உடையார்கட்டுக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும் ஏ - 35 வீதி உடையார்கட்டு பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது .

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுய நினைவிழந்து இருப்பதினால் யார் என்று அடையாளம் காணமுடியவில்லையென புதுக்குடியிருப்புப் பொலிஸார் இன்று ( 05 ) தெரிவித்தனர் .

விபத்தை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தன
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.