ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

சிராணி பண்டாரநாயக்கவுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதற்காக சட்டத்தரணிகள் முயற்சி.

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு வதை செய்வதை நிறுத்தும்படி
அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை , அவருக்கு நீதி பெற்றுக் கொடுப்பதற்காக சகல வழிகளிலும் முயற்சி எடுக்கப் போவதாக ஜனாநாயகத்துக்காக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பில் , சட்டத்தரணி ஜே . சி வெலியமுன கூறியுள்ளதாவது ,

சட்டவிரோதமாக பதவி விலக்கப்பட்டு ஒருவருடமாகி விட்ட போதிலும் கலாநிதி . சிராணி பண்டாரநாயக்க இப்போதும் வதை செய்யப்பட்டு வருகின்றார் .

அடிக்கடி நீதிமன்றங்களுக்கு அல்லது இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வரும்படி அழைப்பாணைகள் இவருக்கு அனுப்பபடுகின்றன .

இது நிறுத்தப்பட வேண்டும் . இதற்காக சிவில் சமூக குழுக்களுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் சேர்ந்து சட்டத்துறை நண்பர்கள் பல இயக்கங்களை தொடங்கவுள்ளனர் என அவர் மேலும் கூறினார்
.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.