மொனராகல் பிரதேசத்தில் பன்றி, கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர் ஒருவர் 2014ம் ஆண்டுக்காக நாட் காட்டி அச்சிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள் ளார். தலதா மாளிகை மற்றும் கௌதம புத்தரின் உருவப்ப டங்கள் இந்தக் கலண்டர்களில் காணப்பட்டுள்ளன. வாடிக் கையாளர்களுக்கு கலண்டர் வழங்கிய கடை உரிமையா ளரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கலண்டர்களை யும் பொலிஸார் மீட்டுள்ளனர். கலண்டர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஓர் பௌத்தர் எனவும், அவரது மனைவி வேறும் மதத்தைச் சார் ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மொனராகல் பொலிஸார் இது தொடர்பி லான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

